News Update :

அடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா?

Written By Admin on Saturday, 8 October 2011 | 02:07

6,000 சதுர கி.மீ பரப்பளவு... 1,867 மீட்டர் உயரம்... 11 வகையான காடுகள்... மொத்தமுள்ள 177 ஊர்வன வகைகளில், 157 வகையான உயிரினங்கள் உலா வரும் இடம்... கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து உயிரோடு இருக்குமிடம்... உலகிலுள்ள பூக்கும் மொத்த தாவரங்களான 5,640ல், 2,654 வகை தாவரங்களின் உய்விடம்... 600க்கு மேற்பட்ட மூலிகைகளை, 500 சதுர கி.மீ., பரப்பிற்கு மேல் மழைக்காடுகளை கொண்ட உலகின் ஒரே காடு...

தமிழக - கேரள எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை குறித்து இப்படி நிறைய தகவல்கள். இத்தனை பெருமைகளையும் பெற்ற மூலிகைகளின் மூலஸ்தானமாக விளங்கும் அகத்திய மலையை, எளிதில் யாரும் பார்த்துவிட முடியாது. அனுமதி கிடைப்பதில் அத்தனை கெடுபிடிகள். இன்னும் கொஞ்ச நாட்களில், பூகோள பொக்கிஷமான அகத்தியமலை பற்றிய சுவாரசியதகவல்கள், தொலைக்காட்சி மூலம் வீட்டின் வரவேற்பறைக்கே வரப் போகிறது.அகத்தியமலை காடுகளையும், மலைகளையும், வீரியமான ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டது. இங்கு மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பை நடத்தி, "ஓர் அருந்தமிழ் காடு' என்ற பெயரில் தயாரான சுற்றுசூழல் விழிப்புணர்வு பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன் ராம்.

படப்பிடிப்புக்காக நீண்ட பயணம்:

திரைப்படக் கல்லூரி மாணவர்கள், புகைப்படகாரர்கள், ஆதிவாசிகள் என 18 பேர் கொண்ட குழு இந்த படத்தின் பின்னணியில் இருக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், 100க்கும் மேற்பட்ட பறவை வகைகள், எண்ணற்ற தவளை இனங்களையும், 500 க்கும் மேற்பட்ட அரியமர வகைகள், 200க்கும் மேற்பட்ட மூலிகைகள் என, பல்லுயிரிகளின் அணிவகுப்புடன், இந்த பொக்கிஷ மலை படமாக்கப்பட்டுள்ளது. மக்களை சுற்றுச்சூழல் விழிப்புணர்வடைய செய்யும் நோக்கில், 2,500 கி.மீ., மேல் நடந்து, 2,000 க்கும் அதிகமான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

பக்கத்தில் படுத்திருந்த ராஜநாகம்:

அகத்தியமலை குறித்த ஆவணப்படத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, விளக்கமாய் பதில் கொடுத்தார் மோகன்ராம்.""இயற்கை மேல் இருந்த காதலால் வேலையை விட்டு விட்டு, 12 ஆண்டுகள் அகத்திய மலை குறித்து ஆய்வு செய்தேன். மனைவியின் நகைகளையும், சில நண்பர்களின் உதவியை வைத்தே இதில் இறங்கினேன். அகத்திய மலையின் சிறப்புகளை பதிவு செய்ய, அலைந்து திரிந்து செய்த ஆய்வுகளை, வனத்துறையினரிடம் காட்டிய பிறகே, தமிழக அரசின் ஒப்புதலை வாங்க முடிந்தது. படப்பிடிப்பின்போது, 25 கி.மீ., போனால் தான் கேமராவிற்கு சார்ஜ் போட முடியும். எங்களுக்கு உதவியாக காணி மக்கள் இருந்தனர். ஒரு முறை ஆந்தையை தேடி போகும்போது, எதிரில் குட்டி போட்டிருந்த புலியை பார்த்தோம். குட்டி புலியை கேமரா மின்ன வரவேற்றோம். அது அப்படியே இருந்தது தான் ஆச்சர்யம். இரவு படுக்கச் சென்ற குகையில், விடியும்போது தான் தெரிந்தது எங்களுடன் படுத்திருந்தது ராஜ நாகம்'' என தனது "த்ரில்' கலந்த அனுபவங்களை சொல்கிறார் மோகன்ராம்.

வரிவிலக்கு தராத அரசு:

அகத்திய மலையில் உள்ள உயிரிகளை பற்றி, பதிவு செய்ய மோகன்ராமுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வரி விதித்தது.எத்தனையோ கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு, வரியை ரத்து செய்யும் அரசாங்கம், இது போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிக்கு வரியை ரத்து செய்யவில்லை.இந்த படத்தை உருவாக்க, இதுவரை 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் மோகன்ராம். ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு மட்டும் தான், இந்த படத்தை கொடுக்கவேண்டும் என, சொல்லி அவரிடம் அரசு சார்பில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.இந்த படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பணம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு பணம் செலுத்தி ஒளிபரப்பினால்தான், இந்த படம் எடுத்ததற்கான நோக்கமே நிறைவேறும். இல்லையென்றால், மக்களுக்கு இந்த அரிய மலை பற்றிய தகவல்கள் கிடைக்காமலே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. "வனத்தையும், உயிரினங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். மக்களுக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தில் உள்ள உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு சுற்றுச்சூழலே காரணமாக அமையும். இது மனிதன் மட்டும் வாழ்றதுக்கான இடம் இல்லை,'' என எச்சரிக்கும் மோகனுக்கு, 2007 ல் நடந்த ஓபன் பிரைன் சர்ஜரி காரணமாக, மாடிப்படி ஏறவே தடை விதித்திருக்கிறார், மருத்துவர். ஆனாலும், சுற்றுச்சூழல் மேல் உள்ள தீராத ஆசையால் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார், இந்த இயற்கையை விரும்பும் மனிதர்.

ஆய்வில் தகவல் தூக்கணாங் குருவிகள் இயற்கையாக கூடு கட்டும்

Written By Admin on Wednesday, 5 October 2011 | 10:51


தூக்கணாங் குருவிக்கு கூடு கட்டும் திறன் இயற்கையாகவே அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கணாங் குருவி எவ்வாறு கூடு கட்டுகிறது, வேறு எந்த முறையையும் அது பின்பற்றுகிறதா என்பது பற்றி எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இது குறித்து பல்கலைக்கழக டாக்டர் பேட்ரிக் வால்ஸ் கூறுகையில், இனப்பெருக்க காலத்தின் போது கூடுகட்டத் தொடங்கும் தூக்கணாங் குருவிகள் கட்டும் ஒவ்வொரு கூடுகளில் வேறுபாடு தென்படுகின்றன. 

அவ்வாறாக சில குருவிகள் இடமிருந்து வலது புறமாகவும், சில வலமிருந்து இடது புறமாகவும் கூடு கட்டுகின்றன. தூங்கணாங் குருவிகள் ஒரே முறையில்தான் கூடு கட்டுகின்றன என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாங்கள் கண்ட காட்சியில் மாற்றம் தெரிந்தது. மேலும் குருவிகள் எந்தவொரு அனுபவமும் இல்லாமல் கூடு கட்டுகின்றன. இதற்கான திறன் தூக்கணாங் குருவிக்கு இயற்கையிலே அமைந்துள்ளது என்று வால்ஸ் தெரிவித்தார்.

''ஆன்டிபயாட்டிக்''

Written By Admin on Monday, 3 October 2011 | 05:08

''ஆன்டிபயாட்டிக்''?


பென்சிலினைக் கண்டறிந்தவர் அலெக்சாண்டர் பிளமிங்.இவர் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி.இவர் 1928-ல் முதன் முதலில் உயிருக்கு எதிரி என்ற கருத்தில் ''ஆன்டிபயாட்டிக்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.தனது ஆராய்ச்சிக்கூடத்தில், கிருமிகள் கண்ணாடிக் கிண்ணங்களில் எவ்வாறு வளர்கின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது,ஒரு கிண்ணத்தில் தானாக வளர்ந்திருந்த பூஞ்சையின் சுரப்பு நீர் மற்ற உயிரினங்களை அழித்துக் கொண்டிருப்பதை கண்டார்.

கிண்ணத்தில் தானாக வளர்ந்த பூஞ்சையின் பெயர்,'பெனிசிலியம் நொட்டேட்டம்'. இறந்து கொண்டிருந்த உயிரியின் பெயர்,'ஸ்டபைலோ கொக்கஸ்' என்ற பாக்டீரியா.பூஞ்சையில் இருந்து சுரந்த பெனிசிலின் என்ற வேதிப்பொருள் தான் பாக்டீரியாவை அழித்துக் கொண்டிருந்தது.இதை கண்டு கொண்டு,ஹாவர்டு ப்ளோரி,எர்னஸ்ட் செயின் என்ற இருவரும் 1940-ல் பெனிசிலினைத் தனிமைப்படுத்தி ஊசி மூலம் மருந்தாகப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தனர்.

இதற்காகவே இவர்கள் இருவருக்கும் பிளமிங்குடன் சேர்ந்து 1945-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தெரிந்த கொசு,தெரியாத தகவல்கள்


கொசு கடித்து விட்டால் போதும்,''இந்த கொசுக்கடி தாங்க முடியலப்பா'' என்று எரிச்சலுடன் சொல்வோம்.உடனே கடித்த இடத்தில் சொரிய ஆரம்பித்து விடுவோம்.இதில் என்ன விசேஷம் என்றால்,பற்களே இல்லாத கொசு நம்மைக் கடிக்கிறது!.

கொசு கடித்ததும்,நாம் ஏன் சொரிகிறோம் என்று தெரியுமா?.

கொசுவிற்கு அதன் கண்களுக்கு கீழே ஊசி போன்ற ஆறு உறிஞ்சுக்குழல்கள் உள்ளன.இது மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சி விடுகிறது.பின்னர்,இந்த இரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒரு ரசாயனப் பொருளையும் கடித்த இடத்தில் கொசு உமிழ்ந்து விடுகிறது.அதனால் தான் நமக்கு சொரிய வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உலகில் சுமார் 2700 வகையான கொசுக்கள் உள்ளன.கொசு பறப்பதில் கில்லாடி.இது தலைகீழாக கூட பறக்கும்.மழை பெய்யும் போது ,மழைத்துளிகளின் இடையே நனையாமல் கூட பறக்குமாம்.பெண் கொசுக்கள் தான் கொடூரமானவை.ஆண் கொசுக்கள் சைவம்தான்.இவை புல்,தழை,பூக்களில் உள்ள தேனை மட்டுமே சாப்பிடுகின்றன.

பெண் கொசுக்களுக்கு முட்டைகளைப் பொரிக்க இரத்தம் தேவைப்படுவதால் தான் மனிதர்களின் இரத்தத்தை மோப்பம் பிடித்து உறிஞ்சுகின்றன.

பார்த்தபடி சாட் செய்யலாம் வீடியோ சாட்டிங் செய்ய பேஸ்புக் ஸ்கைப் வசதி

Written By Admin on Wednesday, 28 September 2011 | 23:12

பேஸ்புக் கணக்கில் இனி வீடியோ சாட்டிங் செய்யலாம். அதற்கான வசதியை இன்டர்நெட் போன் அழைப்பு சேவை நிறுவனமான ஸ்கைப்புடன் இணைந்து பேஸ்புக் அளிக்கிறது.சமூக இணைய தளங்கள் இப்போது மிகப் பிரபலம். உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். உலக விஷயங்களை உடனுக்குடன் சாட் செய்து பரிமாறி கொள்வோர் அதிகம். அதில் முன்னணி வகிக்கும் சமூக இணைப்பு இணைய தளம் பேஸ்புக். இதன் உறுப்பினர்கள் பல கோடி.விஐபிகள் முதல் விவசாயி வரை பலரும் இப்போது பேஸ்புக் கணக்கு வைத்து, தகவல்களை நண்பர்களுடன் புட்டு வைக்கின்றனர். ஒரு போட்டோ வை மட்டும் அப்லோட் செய்து விட்டு, டைப் செய்து தகவலை பரிமாறும் நடைமுறைதான் பேஸ்புக்கில் இதுவரை இருந்தது.

இனி, வீடியோ சாட்டிங்காக, எதிர்முனையில் சாட் செய்பவரை பார்த்தபடி தகவல் பரிமாறலாம். இதற்காக, முன்னணி இன்டர்நெட் வீடியோ அழைப்பு சேவை நிறுவனமான ஸ்கைப்புடன் பேஸ்புக் கூட்டு சேர்ந்துள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் கூறுகையில், ‘‘இது எங்கள் இணைய தளத்தின் பல கோடி உறுப்பினர்களுக்கு நாங்கள் அளித்துள்ள பரிசு. இதுவரை முகம் பார்க்காமல் நட்பு வளர்த்தவர்கள் இனி, ஒருவரையொருவர் பார்த்தபடி சாட் செய்யலாம்’’ என்றார்.

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம்

 உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் அரிசோனா பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும் மேலும் இதன்மூலம் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சூழலை பாதிக்காத, செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் எனஇதனை உருவாக்கவுள்ள நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆகாயத்தை தொடும் ~மச்சு பிச்சு' அதிசயம்



கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டடக் கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.

உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் இது அமைந்துள்ளது.

பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு. இத்தனை ஆண்டு கால இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி இது இன்னும் கம்பீரமாய் இருப்பதே கற்கால மனிதர்களின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இத்தனை ஆயிரக் கணக்கான கற்களை எப்படி இந்த உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் எல்லைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இங்கே இண்டிகுவாட்டானா எனும் ஒரு கல் இருந்தது. இதில் நிறைய ஆவிகள் இருந்ததாகவும், இதில் நெற்றியை வைத்துத் தேய்த்தால் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கதைகள் உலவின. கடந்த 2000 ஆண்டு இதன் மீது ஒரு படப்பிடிப்புக் குழுவினரின் கிரேன் விழுந்ததால் உடைந்து நாசமானது.

எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் கட்டப்பட்ட நகர் சில பத்து ஆண்டகளிலேயே காலி செய்யப்பட வேண்டுமெனில் ஏதோ ஓர் மிக மிக வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயமில்லை.

இங்கிருந்து சுற்றும் பார்க்கும் போது இயற்கையே ஓர் அசையும் சொர்க்கமாக விழிகளுக்குள் நாட்டியாலயமே நடத்துகிறது.

சியர் லீடர்ஸ்


விளையாட்டைப் பார்ப்பதை விட,சியர் லீடர்ஸ் ஆடும் ஆட்டத்தைப் பார்க்குறதுல தான் இந்த பயபுள்ளைக ஆர்வமா இருக்கு.இன்னும் சொல்லப்போனா நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டில இவங்க ஆட்டம் தான் படு ஜோரு.

கிரிக்கெட் மட்டுமில்லாம கால்பந்து,கூடைப்பந்துன்னு இந்த கெட்ட ஆட்டம் எல்லா இடத்திலும் கொடிகட்டிப் பறக்குது.

சரி,இந்த ஆட்டம் எப்ப ஆரம்பிச்சுது தெரியுமா?தெரியலையா......?இத படிங்க.....!

சியர் லீடர்ஸ் ஆட்டத்தை முதன்முதல்ல ஆரம்பிச்சது ஜானி கேம்ப்பல் என்ற மாணவர் தான்.1898-ம் வருடம் நவம்பர் மாசம் நடந்த கால்பந்தாட்டத்தைப் பார்க்கும் போது அவருக்கு குஷி அதிகமாயிடுச்சி.உடனே மைதானத்துலேயே எழுந்து நின்னு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டார்.அவரைப் பார்த்து இன்னும் சில பேரு ஆட,அவங்க ஆட்டத்தைப் பார்த்து வீரர்களுக்கும் உற்சாகம் பொத்துக்கிச்சி.பின்ன என்ன ஒரே கோல் மழை தான்.

அதுல இருந்து விளையாட்டுப் போட்டி நடக்கும் போதெல்லாம் சியர் லீடர்ஸ் ஆடணும்கிறது கட்டாயமாயிடுச்சு.இந்த ஆட்டத்தை ஆரம்பிச்சது ஆம்பளைன்னாலும்,இப்ப பொண்ணுங்க தான் நிறைய ஆடறாங்க,ஆடறவங்க ஆடினா தானே வீரர்களுக்கு உற்சாகம் பிறக்கும்?!.

விந்தைத் தகவல்கள் (பகுதி-1)



சில விந்தைத் தகவல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

  1. எறும்புகள் தூங்குவதில்லை.
  2. கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
  3. உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  4. இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.
  5. ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது.
  6. ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும்.
  7. பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும்.
  8. நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும்.
  9. கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும்.
  10. ஒரு மரம்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும்.
  11. பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.
  12. பாலூட்டிகளின் இரத்தம் சிவப்பு,பூச்சிகளின் இரத்தம் மஞ்சள்,நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீள நிறமுடையது.
  13. எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை.
  14. எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது.
  15. பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது.
  16. முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
  17. ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும்.
  18. பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.
  19. பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.
  20. யானைகளால் குதிக்க முடியாது.
  21. மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும்.
  22. ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
  23. கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும்.
  24. ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும்.
  25. நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.

சிவபூஜையில் கரடியா?

Written By Admin on Monday, 26 September 2011 | 09:03



தெரிந்தவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும் போது இன்னொருவர் குறிக்கிட்டால்,சிவ பூஜையில் கரடி புகுந்தமாதிரி என்று சொல்வார்கள்.

அது எப்படி பூஜை அறைக்குள் கரடி வர முடியும்.


உண்மையில் இதில் 'கரடி' என்பது மிருகத்தை குறிக்காது.'கரடி' என்பது ஒரு வகை வாத்தியக் கருவி.முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வார்கள்.இதைத்தான் சிவபூஜையில் கரடி என்று நாம் வேறு ஒரு பொருளில் பயன்படுத்துகிறோம்.  

மைக்கேல் ஜாக்சனின் குரங்கு

Written By Admin on Sunday, 25 September 2011 | 09:42

  
                               பணக்கார வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைப் பார்த்திருப்போம். ஒரு மனிதனை விட அந்த நாய்க்கு அதிக முக்கியத்துவம் ருக்கும்.வீட்டில் ஷோபாவில் படுத்துக்கொள்ளும்,                    காரில் பயணம் செய்யும்.கறி என்ன விலை விற்றாலும் அதற்கென்று தனியாக கறி சமைத்து கொடுப்பார்கள்.பிறந்தாலும் பணக்கார வீட்டில் நாயாக பிறக்க வேண்டும் என்றும்,ஏங்குவார்கள் அந்த வீட்டில் வேலை செய்யும் மனிதர்கள்.

இதைப்போல தான் மைக்கேல் ஜாக்சன் வீட்டில் ஒரு குரங்கு வளர்ந்து வந்தது.இந்த குரங்கை பார்த்த எல்லோருமே மைக்கேல் ஜாக்சன் வீட்டில் குரங்காக பிறக்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டார்கள்.ஏனென்றால் இன்றைக்கு உலகில் இருக்கும் குரங்குகளிலே மிகவும் பணக்கார குரங்கு இதுதான்.

தனது பிரியத்திற்குரிய 'பபிள்ஸ்' என்ற இந்த சிம்பன்சிக்கு மைக்கேல் ஜாக்சன் 20 லட்சம் அமெரிக்க டாலருக்கான சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்.
ஒரு காலத்தில் இது மைக்கேலுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்று வரும். அவருடன் உரிமையுடன் விளையாடும்.டைனிங் டேபிளில் சமமாக உட்கார்ந்து சாப்பிடும்.மைக்கேலின் பெட்ரூமிர்க்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை.அங்கேயும் உரிமையோடு நுழைய அனுமதி பெற்ற ஒரே ஜீவன் பபிள்ஸ் தான்.


மைக்கேல் இசை நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குப் பறக்கும் போதும் அவரோடு சேர்ந்து பறக்கும் அளவிற்கு பபிள்ஸ் மீது பிரியம் வைத்திருந்தார்.அப்படி இணைந்திருந்த இவர்களுக்குள்ளும் பிரிவு வந்தது.

மைக்கேலுக்கு குழந்தை பிறந்த போது இந்த குறும்பு குரங்கு,குழந்தையை எதுவும் செய்து விடக்கூடாது என்று பயந்து போன மைக்கேல்,புளோரிடாவில் உள்ள ஒரு காப்பகத்திடம் ஒப்படைத்தார்.அதை பராமரிக்க மாதந்தோறும் பணம் கொடுத்து பார்த்து வந்தார்.


இறப்புக்கு முன் தனது உயிலில் பபிள்சுக்கும் ஒரு பங்கு எழுதி வைத்திருந்தார். காப்பகத்தில் மிகவும் சாமர்த்தியமாக இருக்கும் பபிள்சுக்கு இன்னமும் கூட ஜாக்சன் இறந்த விஷயம் தெரியாதாம்.....!

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள்

Written By Admin on Sunday, 18 September 2011 | 06:16

                        இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும் அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம்.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது.

தலைநகர்

                              

             நாகர்கோவில் இம் மாவட்டத்தின் தலைநகரமாகும்.அன்றைய நாஞ்சில் நாட்டில் பெரிய நகரமாக இருந்த நாகர்கோவில் மாவட்டத்தின் மத்தியில் இருப்பதாலும் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் அமைந்திருபதாலும் நாகர்கோவில் என்ற பெருமையுடன் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

சுற்றுலா தலங்கள்

விவேகானந்தர் மண்டபம்

25-12-1892 அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர் அன்னை பகவதியை வணங்கிய பின் கடலில் தூரத்தில் தெரிந்த பாறையை கண்டு மகிழ்ந்து நீந்தி சென்று அதில் தியானத்தில் ஆழ்ந்தார்.இந்தியாவின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்கு வைத்து தான் சுவாமிக்கு உதயமானது.அதன் நினைவாக தான் சுவாமி விவேகானந்தர் தியானம் மேற்கொண்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும்  சிலையும் அமைக்கப்பட்டு 02-09-1970-ல் அன்றைய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் ருகில் உள்ள பாறையில் விஸ்பரூபத்துடன் காட்சியளிப்பது,உலக பொதுமறையாம் திருக்குறள் 
தந்த தெய்வ புலவர் திருவள்ளுவர் சிலை.   133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு கூறும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து 

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கும்,திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் பூம்புகார் நிறுவனத்தினரால் எம்.எல்.குகன் மற்றும் எம்.எல்.பொதிகை என்ற இரண்டு படகு மூலம் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.




காந்தியடிகள் நினைவு மண்டபம் 

தேசதந்தை அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு குமரி கடற்கரையில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அம்மண்டபத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் விழுகிறது.இதன் மூலம் இயற்கையே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

15-01-1937-ல் காந்தியடிகள் குமரிக்கு வருகை தந்த போதுகுமரி கடலில் நீராடிய காட்சி,அன்று சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து வரவேற்பு புத்தகத்தில் தமிழில் கையெழுத்திட்டது இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.

காமராஜர் நினைவாலயம்

கருப்பு காந்தி என்றும்,கர்மவீரர் என்றும் குமரி மாவட்ட மக்களால் அப்பச்சி என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபம் 
02-10-2000 அன்று திறந்து வைக்கப்பட்டது.இங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு,தேசப்பற்று என பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குமரி வரலாற்றுக் கூடம்


கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் தென்புறம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம்.


இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள்,இந்த உலகத் தோற்றம்,அன்னை குமரியின் அவதாரம்,விவேகானந்தரின் வரலாறு,வைகுண்டரின் வரலாறு,புனித தாமஸ்,மகாத்மா காந்தி,விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.



சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் 


குமரி கடலில் சூரிய உதயம் காண்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.உலகில் சூரிய உதயம்,சூரிய அஸ்தமனம் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க்ககூடிய இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்று.சித்ராபவுர்ணமி அன்று சூரியன் மறைவதையும்,சந்திரன் தோன்றுவதையும் ஒரு சேர காணலாம்.இந்த அபூர்வ காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது.


முக்கடலும் சங்கமிக்கும் புனித கடலில் நீராடி கதிரவனை வழிபடுவது புண்ணியமாகும்.
மகாபாரதத்தில் அர்ஜுனன் குமரியில் வந்து நீராடினான் என்று வரலாறு கூறுகிறது.
தென்னாட்டவர்கள் காசிக்கு போய் கங்கையில் குளிப்பது வழக்கம்.வடநாட்டவர்கள் குமரிக்கு வந்து குமரி கடலில் குளிப்பது வழக்கம் "கங்கை ஆடில் என்,குமரி ஆடில் என்" என்பது அப்பர் தேவாரப்பாடல்.


மருந்துவாழ்மலை


கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பொற்றையடி என்னுமிடத்தில் உள்ள மருந்துவாழ்மலை இராமாயண காலத்து வரலாறுடையது.ஆன்மீக மலையாகவும்,மூலிகை மலையாகவும் கருதப்படும் இம்மலை இங்கு வந்ததற்கு புராண பின்னணி உண்டு.இலங்கையில் சிறைவைக்கப்பட்ட சீதாபிராட்டியை மீட்பதற்காக நடந்த போரில் காயம் பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளுக்காக,அனுமன் மருந்து செடிகளை கொண்டு வரச்சென்றார்.அவ்வாறு சென்ற அனுமன் மருந்து மூலிகைகளின் பெயரை மறந்து விடுகிறார்.வெறுங்கையுடன் போக கூடாது என்பதற்காக சஞ்சீவி மலையை தன் கையால் தூக்கிக்கொண்டு இலங்கைக்கு சென்ற போது,அம்மலையின் ஒரு பகுதி உடைந்து இந்த இடத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த மருந்துவாழ் மலையில் அனைத்து நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த அறிய வகை மூலிகைகள் இன்றும் உள்ளது.


இம்மலை ஆயிரத்து 800அடி உயரமுடையது. 625 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மலையில் பல்வேறு கோயில்களும்,மடங்களும் அமைந்துள்ளது.


உதயகிரி கோட்டை


தக்கலை அருகில் 93 ஏக்கர் நிலப்பரப்பில் 16 அடி உயரத்தில் கோட்டை சுவர்களால் எழுப்பப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் உதயகிரி கோட்டை ஆகும்.அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வெடிமருந்துகள் தயாரிக்கும் இடமாகவும்,போர் வீரர்களுக்கு போர் பயிற்சியளிக்கும் இடமாகவும் இருந்து வந்தது.திருவிதாங்கூர் மன்னரால் சிறைபிடிக்கப்பட்ட டச்சு நாட்டு தளபதி டிலனாய் பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தான தளபதியாக நியமிக்கப்பட்டார்.அயல்நாட்டிலிருந்து வந்த அன்னியநாட்டுக்காரர் மன்னரின் விசுவாசியாக விளங்கியதால்,அவர் இறந்த பிறகு அவரது விருப்பத்திற்கிணங்க  அவரது உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.அது இன்னும் வரலாற்று சின்னமாக காணப்படுகிறது.


பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோட்டை தற்போது 
புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மான் பூங்கா,லவ் பேர்ட்ஸ்,சிறுவர் பூங்கா,மலை நடைப்பாதை,மயில்,நட்சத்திர ஆமை,புறாக்கள்,வெளிநாட்டு வாத்து,மீன்காட்சியகம்,குடில்கள், சறுக்கு,ஊஞ்சல் என பலவித பொழுதுபோக்கு வசதிகளுடன் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை 


பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனை,தக்கலையிலிருந்து 2கி.மீ. தொலைவில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இங்குள்ள கோவில் சிலைகளும்,சிற்ப கூடங்களும்,அரிய பொக்கிஷங்களும்,சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.தமிழ் நாட்டில் அமைந்திருந்தாலும் இவ்வரண்மனை கேரள அரசின் கண்காணிப்பின் கீழ்,கேரள பாரம்பரிய முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது.மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் உபயோகப் படுத்திய மூலிகை கட்டில்,வாள்,கேடயம் உட்பட பல அரிய பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தொட்டிப்பாலம் 


திருவட்டாரிலிருந்து 3கி.மீ. தொலைவில் மாத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டி பாலமாகும்.இது 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும்  உடையது.இந்த பாலம் சுமார் ரூ.13 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது,விளவங்கோடு கல்குளம் தாலுக்காக்களின் விவசாயத்தில் ஏற்பட்ட வறட்சியை போக்குவதற்காக 1966-ல் கட்டப்பட்டது.


முக்கிய கடற்கரைகள் 


திரிவேணி சங்கமம் (கன்னியாகுமரி)


வங்கக்கடல், அரபிக்கடல், இந்துமகாசமுத்திரம் ஆகிய முக்கடல்கள் ஒன்றாக சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய தலமாகும்.






வட்டக்கோட்டை கடற்கரை

குமரிமுனைக்கு கிழக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள,இந்த கற்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி டிலனாயின் உத்தரவுப்படி கட்டப்பட்ட படைத்தளமாகும்.இக்கோட்டையை சுற்றிலும் உயரமான மதில்சுவர்கள் உள்ளன.உள்ளே சென்று பார்த்தால் அலைவீசும் கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்.


சங்குத்துறை கடற்கரை


நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையான சங்குத்துறை பீச் தற்போது நவீன மயமாக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா,குடில்கள் உட்பட சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.




சொத்தவிளை கடற்கரை


நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் புத்தளம் அருகில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை.நாகர்கோவில் மக்களுக்கு இது இயற்கை அளித்த ஓர் வர பிரசாதமாகும்.








தெக்குறிச்சி கடற்கரை
                                     
மேற்கு கடற்கரையோரம் ஆரவாரமின்றி அமைதி அழகுடன் காட்சியளிக்கும் இக்க்கடற்கரை நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.கடலோரம் அமைந்துள்ள சவுக்கு மரங்களின் நிழல் பரவசமூட்டுகிறது.






முட்டம் கடற்கரை


தமிழகத்தின் அழகிய கடலோர கிராமங்களில் தனித்தன்மையோடு திகழ்வது முட்டம் கடற்கரையாகும்.இங்கு அமைந்துள்ள கலங்கரை விளக்கம் காண்போர் இதயம் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது இக்கடற்கரை.




குளச்சல் கடற்கரை


நாகர்கோவிலிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளச்சல் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும்.கி.பி 1741-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி டச்சுப்படையினருக்கும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிற்கும் இங்கு நடந்த போரில்,மன்னர் வெற்றி வாகை சூடி டச்சுப்படையை சேர்ந்த சிலரை கைதியாக சிறைபிடித்தார்.அவர்களில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிலனாய் மிகத்திறமையான போர் வீரர் என்பதை அறிந்த மன்னர்,அவரை மன்னித்து தனது படைத்தளபதியாக நியமித்தார்.இங்கு மன்னரின் வெற்றியை நினைவு படுத்தும் வகையில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது.வரலாற்றுப் புகழ்பெற்ற இத்துறைமுகம் விரைவில் சர்வதேச துறைமுகமாக மாற இருக்கிறது.


தேங்காய்ப்பட்டினம் கடற்கரை


பைங்குளம் கிராமம் அருகே அமைந்துள்ள இக்கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்க காட்சியளிக்கிறது.மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது.



தொடரும்....

குப்பையில் ஒரு காடு

Written By Admin on Friday, 16 September 2011 | 03:21


           இருக்கும் காடுகளை அழிப்பதுதான் இந்தியர்கள் ஸ்டைல்.ஒவ்வொரு நாளும் கணிசமான காடுகள் அழிந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் ஜப்பானில் நிலையே வேறு.அங்கு காடு இல்லை.இருந்தாலும் அவர்கள் உருவாக்கினார்கள்.

               உட்கார்த்து ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னவோ தெரியவில்லை.

                ஜப்பானியர்களின் மூளையே மூளை.ஜப்பானில் முழுக்க முழுக்க கான்கிரீட் காடுகள் தான்.மருந்துக்குக்கூட ஒரு சென்ட் ஒரிஜினல் காடு கிடையாது.ஆனால் நாடு என்று ஒன்று இருந்தால் அதற்குள் காடு என்ற ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.நிலங்களை எல்லாம் வீடுகள் ஆக்கிரமித்து இருக்க வேறு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்த ஜப்பானிய அரசின் நினைவுக்கு வழக்கம் போல் கடல் தான் நினைவுக்கு வந்தது.கடலில் காடுகள் உருவாக்க நினைத்தது.

            அது எப்படி முடியும்?

               ஜப்பானில் குப்பைகளுக்கு பஞ்சமே இல்லை.மொத்தக் குப்பைகளையும் கடலில் ஒரே இடத்தில் கொட்டினார்கள்.செயற்கையாக ஒரு தீவை உருவாக்கினார்கள்.குப்பை மேல் மண்ணை நிரப்பினார்கள்.அதில் மரம் வளர்ப்பதுதான் திட்டம்.இதில் இரண்டு நன்மைகள் உண்டு.இதனால் குப்பை காலியாகும்.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது.காடும் வளர்க்கலாம்.கார்பனையும் கட்டுப்படுத்தலாம் என்று நம்பிக்கையோடு களம் இறங்கினார்கள்.


              2008 நவம்பர் முதல் இப்போது வரை 9 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து இருக்கிறார்கள். 88 ஹெக்டேரில் உருவாகிக் கொண்டு இருக்கும் இந்த காடு 2016-ம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமாம்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உலகின் அதிவேக இணைய சேவை

Written By Admin on Tuesday, 13 September 2011 | 11:51

       ண்டர்நெட் பயன்படுத்தும் எல்லோரையுமே எரிச்சலடையச் செய்யும் ஒரு விஷயம் அதன் ஆமை வேகம் தான்.குறிப்பாக ஒரு கிரிக்கெட் போட்டியை ஆன்லைனில் பார்த்தால் அதன் உண்மை புரியும்.அல்லது இணையத்தில் அதிக எடை கொண்ட பைல்களை எற்றவோ,இறக்கவோ செய்தால் கூட கண்டுபிடித்து விடலாம்.

           
                  டவுன்லோடு செய்யும்போது நகத்தை கடித்து கடித்து கையையே கடித்து விடுபவர்களை குஷிபடுத்தும் செய்தியை கூகுள் அறிவித்துள்ளது.உலகிலேயே அதி வேக பிராட்பேண்ட் சேவையை இந்நிறுவனம் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விட்டுள்ளது.


                         இப்போதைக்கு நம்ம ஊரில் சாதாரண  பிராட்பேண்ட் வேகம் 256 kbps முதல் மூன்று mbps வரை தான். கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும்  பிராட்பேண்ட் வேகமோ ஒரு GBps.அதாவது தோராயமாக ஆயிரம் மடங்கு அதிக வேகம் கொண்டது.


          இந்த வேகம் இருந்தால் இணையத்திலிருந்து ஒரு படத்தை  டவுன்லோடு செய்ய அதிகபட்சம் ஒன்றோ,இரண்டோ நிமிடமே போதுமானது.இணையத்தில் எந்த நேரடி ஒளிபரப்பு காட்சியையும் தங்கு தடையில்லாமல் பார்க்கலாம்.இணையத்தில் மிகப்பெரிய பைல்களை வினாடிகளில் அனுப்பலாம்.டவுன்லோடு செய்யலாம்.ஒரு நூறு mb பைலை அனுப்ப பத்து வினாடிகளே போதும்.

               இந்த வசதி சாதாரண தொலைபேசி இணைப்பு வழியாக வழங்கப்படாமல் பைபர் ஆப்டிக் வயர்களை வீடுகளில் இணைப்பதன் மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.ஹைபிராட்பேண்ட் வசதி வீடியோ சேட்டிங்,குழு சேட்டிங்,போன்றவைகளுக்கும்,இணைய குழுக்களுக்கும் வரப்பிரசாதமாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


                        திருட்டு வீடியோ டவுன்லோடு செய்பவர்கள் ஒரு நிமிடத்தில் ஒரு படத்தை டவுன்லோடு செய்து விட்டு ஓடிவிடலாம் என்பது மட்டுமே திரையுலகம் கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம்.

நாணயத்தைச் சுண்டும் வழக்கம் ஏன்?

Written By Admin on Sunday, 11 September 2011 | 05:38

                 கி.மு.10-ல் லிடியாவைச் சேர்ந்தவர்கள் முதலில் நாணயத்தை தயாரித்தனர்.ஆனால் அதற்கு 900 ஆண்டுகளுக்குப் பிறகுதான்,முடிவு செய்வதற்கு நாணயத்தைச் சுண்டுவது வழக்கத்துக்கு வந்தது.


                ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமாபுரி நாணயத்தின் ஒரு பக்கத்தில் அவர் தலை பொறிக்கப் பட்டிருக்கும்.அவர் மீது மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. மிக முக்கியமான நீதிமன்ற வழக்குகளில் சீசர் இல்லாத போது அவர் தலை பொறிக்கப்பட்ட நாணயத்தைச் சுண்டுவதன் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அரசனின் தலைப்பக்கம் மேலே தெரியும் படி நாணயம் விழுந்தால்,அந்த பிரச்சினைக்கான தீர்வை அரசர்(அங்கு இல்லாமல் போனாலும்)ஏற்கிறார் என்று கருதப்பட்டது.
       
                     இந்த முறையைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.